கணினிகளைத் தாக்கும் 7வகைத் திருடர்கள்

இணைய வெளியின் பாதுகாப்பு என்பது சற்றுக் கடினமான ஒன்றுதான். முகமறியாத இவ்வுலகில் எதை விடுவது, யாரை நம்புவது என்பதான கடினமான சூழலில் அவ்வப்போது வரும் தகவல்களைக் கொண்டே நம்முடைய தற்காப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
இணையத்தில் தொல்லை கொடுப்பவர்களை 7 வகையினராகப் பிரித்துள்ளனர். இவர்களுடைய செயல்பாட்டை ஆய்ந்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
1. இணையக் குற்றவாளிகள் (Cyber Criminols)
இவர்களே இணையத்தில் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களுடைய குறி பணம்தான். வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டுகளின் பாஸ்வேர்டுகளைத் திருடுவது, போலி வங்கி இணையதளங்கள், போலி வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, இமெயில் மற்றும் பிற சேவைகளில் நாம் உபயோகிக்கும் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளைத் திருடி அதன் மூலமாக மிகப்பெரிய கொள்ளைகளை நிகழ்த்துவது ஆகியவை இவர்களது வேலை.
2. தேவையற்ற விளம்பரங்களை பரப்புவோர் (Spammers and adware spreaders) 
முறையற்ற, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாக பயனருக்கு வலை விரித்து அதன் மூலமாக பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் அடாவடித்தனமான ஒரு வியாபார யுக்தியாகும். 
3. பயமோ, ஆசையோ காட்டி திருடுபவர்கள் (Advanced persistent threat (APT) agents) 
இந்த வகையினர் தங்களுக்கு சாதகமான சட்ட திட்டங்கள் கொண்ட நாடுகளிலிருந்தே இயங்குகின்றனர். உங்களுக்கு லாட்டரியில் பணம் விழுந்திருக்கிறது, பரிசு கிடைத்திருக்கிறது, அதனைக் கொடுக்க சிறிதளவு பணம் செலுத்துங்கள் என்று வரும் இமெயில்கள், குறுஞ்செய்திகள் இந்த வகையினருடைய வேலைதான்.
4. வர்த்தக உளவாளிகள் (Corporate spies)
நிறுவனக் கணினிகளின் பாஸ்வேர்ட் கட்டமைப்பை உடைத்து விபரங்களை திருடி போட்டி நிறுவனங்களுக்கு  விற்றுப் பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களும் தங்களுக்கு சாதகமான சட்ட திட்டங்கள் உள்ள நாடுகளிலிருந்தே இயங்குகின்றனர்.
5. தகவல்களை உளவு பார்ப்பவர்கள் (Hacktivists)
அரசியல், மதம், சுற்றுப்புறம் சார்ந்த அல்லது சொந்தக் கோட்பாடு ஒன்றை வைத்துக் கொண்டு அதன்படி மற்றவருக்கு பயனுள்ள அல்லது தொல்லை கொடுக்கும் விதமான கருத்துக்களையோ அல்லது எதிரியின் ரகசிய தகவல்களை இணையதளங்களில் கசிய விடுவதன் மூலமாக அவர்களை பலவீனமடையச் செய்ய முயற்சிப்பவர்கள்.
6. இணையப் போர்வீரர்கள் (Cyber warriors)
இது ஒரு நவீன இணையப் போர்முறையாகும். எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்களை திருடுதல், ராணுவ கணினிகளை செயலிழக்கச் செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இதற்கு உதாரணமாக ஈரான் ராணுவக் கணினிகளைத் தாக்கிய ஸ்டக்ஸ்நெட் வைரசைக் குறிப்பிடலாம்.
7. அடாவடித் திருடர்கள் (Rogue hackers)
இந்த வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையவெளியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய திறமையை மற்றவர்களுக்குக் காட்டி தற்பெருமையடிக்க சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவர்களுடைய பொழுது போக்காகும். பெரும்பாலும் இரவுதான் இவர்களது அடாவடிக்கான நேரமாகும். இவர்களிடமிருந்து நம் கணினியைப் பாதுகாக்க நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதும், அதை அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
. Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget