எந்த ஒரு ஃபைலையும் வேறொரு ஃபைல் ஃபார்மட்டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் கன்வர்ட் ஃபைல்ட் டாட் காம். இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் ஃபைலை அப்லோட் செய்துவிட்டு எந்த அவுட் புட் ஃபார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட ஃபார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த ஃபைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது. இணையதள முகவரி :http://www.convertfiles.com/
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment