இது கோடைகாலம், நம் இல்லக் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம். வெளியில் சென்று விளையாடிய நேரம் போகக் களைத்திருக்கும் நேரத்தில் வீட்டில் அமர்ந்து விளையாட கணினி விளையாட்டுக்கள் சில இணைய தளத்தில் உள்ளன. மிகவும் சிறிய அளவிலான இந்த விளையாட்டுக்களில் சில போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. இவ்விளையாட்டுக்களை http://free-zd.t-com.hr என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பணப் பரிவர்த்தனை, வியாபாரம், வங்கி ஆகியவற்றை நிர்வகிக்க பழக உதவும் Trade என்றும் MonoPoly என்றும் அழைக்கப்படும் வியாபார விளையாட்டு பயனுள்ளது.
அடுத்து சதுரங்க விளையாட்டை கணினியில் விளையாட விரும்பும் குழந்தைகளுக்கும் பெரியோருக்கும் யேசெஸ் (yea Chess) சிறப்பானது.
77 விதவிதமான சிறிய விளையாட்டுக்களை ஒரே விண்டோவில் விளையாடும் வகையில் ஒரு மென்பொருளும். 5 விளையாட்டுக்களை கொண்ட ஒரு மென்பொருளும் இத்தளத்தில் கிடைக்கிறது.
மேலும் இணைய வசதி உள்ளவர்கள் வேறொரு ஊரில். நாட்டில் உள்ள நண்பர்களுடன் விளையாடும் வகையிலான நெட்வொர்க் கேம்கள் இரண்டும் இத்தளத்தில் உள்ளது சிறப்பாகும்.
இம்மென்பொருள்களை டவுன்லோட் செய்ய: http://free-zd.t-com.hr/drazen/index.html

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment