தளத்தின் முகவரி: http://photoshopbrushes.eu/
இந்த பிரஷ்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்களுக்கு
போட்டோஷாப்பில் பிரஷ் டூலை (Short cut - B) செலக்ட் செய்தால் படம் 1இல் உள்ளபடி பிரஷ் டூலும் மெனுபாரில் டிபால்ட்டாக உள்ள பிரஷ் படமும் காட்டப்படும்.
டிபால்ட் பிரஷ் படத்திற்கு அருகில் உள்ள பிரஷ் மெனு ஏரோவை கிளிக் செய்தால் படம் 2இல் உள்ளவாறு பிரஷ்களின் படம் தெரியும். அதில் பிரஷ் அளவு காட்டப்படும் இடத்தில் காட்டப்படும் வலதுபக்கம் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்ய தோன்றும் மெனுவில் லோட் பிரஷ் (Load Brushes) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்பொழுது நீங்கள் லோட் செய்த பிரஷ்களை கீழே அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் காட்டப்படும். இனி அதில் எந்த வடிவம் தேவையோ அதனை தேர்ந்தெடுத்து அதன் அளவை மேலே உள்ள அம்புக்குறி காட்டும் இடத்தில் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment